அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து கடந்த 60 ஆண்டுகாலமாக வழக்கு நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று மாலை தனது தீர்ப்பை வழங்கியது.
இத்தீர்ப்பின் படி, சர்ச்சைக்குரிய நிலம், 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதி ராம்லல்லாவுக்கும், ஒரு பகுதி வக்பு வாரியத்துக்கும், ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை அகற்றப்படாது என்றும், அங்கு தற்போதைய நிலையே மேலும் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
வக்பு வாரியம் ஏற்பு : அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள வக்பு வாரியம், இதனடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. , வெற்றியுமில்லை, யாருக்கும் தோல்வியுமில்லை என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத் பொதுசெயலர் பிரவீண் தொகாடியா நீதித்துறை மீது இநதுக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிரூபணமானது என கூறியுள்ளார்,