Tuesday, December 18, 2018

Karthikeya Sivasenapathy


Source:
Karthikeya Sivasenapathy
https://ift.tt/2A7KwCZ
"இந்திய நாட்டின் எழுபது வருட கால சரித்திரத்தில் முதன் முறையாக தூத்துக்குடி STERLITE (வேதாந்தா) வழக்கிலே, தேசிய பசுமை ஆணையத்திலே, தமிழகத்தை சேர்ந்த ஒரு நீதியரசரை இந்த உண்மை ஆராயும்குழுவுக்கு தலைவராக நியமிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அவர் தமிழகத்திற்கு தமிழர் என்ற முறையில்சாதகமாக இருப்பாரே தவிர உண்மையைக் கூற மாட்டார்" என வேதாந்தா குழுமம் ஒரு ஆணைப்பத்திரத்தை தாக்கல் செய்தது.அதையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு அகர்வால்நிறுவனத்திற்கு ஒரு அகர்வால் நீதி அரசரையே உண்மை கண்டு அறியும் குழுவின் தலைவராக நியமித்தது. அந்தக் குழு உண்மையைக் கண்டு அறிந்து STERLITE நிறுவனம் எந்த வித தவறையும் செய்யவில்லை சுற்றுசூழலுக்கும்,பல்லுயிர் ஓம்புதலுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் எந்த கேட்டையும் விளைவிக்கவில்லை என்றுகூறி நமது தமிழக அரசாங்கம் ஏற்படுத்திய எவ்வித பயனும் அற்ற அரசாணையை ரத்து செய்து, STERLITE ஆலை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவினை வெளியிட்டு உள்ளது. இது மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும். சென்று என்ன தீர்வுகள் ஏற்படும் என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். ஒரு நீதி அரசரின் மீது ,"அவர் ஒரு இனத்தைச் சேர்ந்தவர் .ஒரு மொழி பேசும் ஒரு பிரிவை சேர்ந்தவர் .அவர் மீது நம்பிக்கை இல்லை" என்று கூறுவதெல்லாம் இந்திய நாட்டின் நீதித் துறை சரித்திரத்திலேயே நிகழாதஒன்று. ஒரு நீதி அரசரை, மொழி ,இனம் என எவ்வித பற்றிற்கும் இடம் அளிக்காமல் நீதியை நிலை பெற செய்பவரை.. இப்படி தவறாகக் கூறலாமா? இதைத் தமிழக அரசாங்கம் கண்டித்து இருக்க வேண்டாமா ? இதைத் தேசிய பசுமை தீர்ப்பாணையமோ , உச்ச நீதி மன்றமோ கண்டித்து இப்படி ஒரு நீதி அரசரின் நேர்மைக்கு இவ்வாறு பங்கம் விளைவிக்கக் கூடாது என்று கண்டித்து இருக்க வேண்டாமா ? அதெல்லாம் போகட்டும், அகர்வால் பனியா வகுப்பைச் சேர்ந்த குஜராத் அகர்வாலுக்கு ,அதே வகுப்பைச்சேர்ந்த இன்னும் ஒரு நீதி அரசரை நியமிப்பது எவ்வித நியதி ? "இந்நாட்டில் நீதி எங்கேனும் உயிருடன் உள்ளதா ? " என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நீதிமன்றமே சாமானியனுக்கும், ஏழைக்கும் இருக்கக் கூடிய ஒரு கடைசி புகலிடம் .. அதனையும் பங்கப்படுத்தும் விதத்தில் வேதாந்தா நிறுவனம் செயல் படுகின்றதே !! -- கார்த்திகேய சிவசேனாபதி

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...