Saturday, October 27, 2018
போதும் அதிமுக, போதும் திமுக.
Source:
போதும் அதிமுக, போதும் திமுக.
https://ift.tt/2OWI4c8
ரத்தமும், தாய்ப்பாலும் தான் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது. அதுக்கும் வேட்டு வச்சுட்டாங்க. ரத்தத்தில் தண்ணீரை கலந்து 6 மாதங்களாக விற்ற கும்பல் ஒன்றை உத்தர பிரதேசத்தில் கைது செஞ்சு இருக்காங்க. உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் கடந்த ஆறு மாதங்களாக போலியாக, அனுமதி இன்றி ரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளது. முகமது நசீம் என்பவர் ராகவேந்திர சிங் என்ற லேப் டெக்னிசியனுடன் துணையுடன் இந்த ரத்த வங்கியை நடத்தி வந்துள்ளார். போதைக்கு அடிமையானவர்கள், பணம் தேவைப்படும் ஏழை மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து ஒரு யூனிட் ரத்தத்தை எடுத்துள்ளனர். அதனுடன் குளுகோஸ் தண்ணீரை சேர்த்து இரண்டு யூனிட்டாக மாற்றியுள்ளனர். இதனை ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். ரத்தம் எடுக்கப்பட்ட ரத்தத்தை, எச்ஐவி உள்ளிட்ட எந்த சோதனையும் செய்யாமல் அதனை கலப்படம் செய்து அப்படியே விற்பனை செய்துள்ளனர். அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து, அசல் ரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து ரத்தம் விற்பனை செய்யும்போது பயன்படுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment