Sunday, May 27, 2018

#புதுச்சேரி_கொல்கத்தா_கடற்பாலம் உலகின் அதி நவீன நானோ டெக்னாலஜி கடற்பாலம் புதுச்சேரிக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே போடப்படுகிறது.. ஏதோ ஒரு வெளிநாடு சென்றோம் வந்தோம் என்றில்லாமல் தான் பசிபிக் கடல் மீது பார்த்த ஒரு பாலத்தை பார்த்ததும் நம் மோடிஜி அவர்களின் பத்தறிவுள்ள மூளை சிந்தித்ததன் விளைவே இந்தப்பாலம்.! 2020 ஆம் ஆண்டு நம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளது.! யாருக்கும் ஐயம் எழாத வகையில் இக்கட்டுமான ஒப்பந்தம் அதானிக்கு வழங்கப்படுகிறது.! இந்த ஒப்பந்தத்திலேயே ஒரு நேர்மை இருக்கிறது என்பது உங்களுக்கு தெளிவாக தெரிகிறதல்லவா.. அது தான் மோடி.! எதையும் மறைத்தோ பின் பக்கமாகவோ செய்பவர் அவர் அல்ல.. அதெல்லாம் திருட்டு திராவிடத்தினர் செய்வது.! சரி அதென்ன நானோ டெக்னாலஜி பாலம்.? பாலத்தின் ஒரு கரையான புதுச்சேரியில் ஒரு தூண் இருக்க மறுபுற தூண் கொல்கத்தாவில் இருக்கும் இடையில் எந்த தூண்களும் கிடையாது.!ஆம் அங்கு மோடி ஆதரவாளர்களின் கோஷங்கள் ஒலிக்கும்..! அந்த கோஷங்கள் ஒலிக்கும் ஆடியோ ஸ்பீக்கர்கள் பாலம் முழுவதும் பொருத்தப்பட்டு இருக்கும் அது பாலத்தை நன்கு தூக்கிப் பிடிக்கும் அந்தளவு முட்டு கொடுக்கும் கான்கிரீட் இதுவரை உலகத்தில் எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே பிரபஞ்ச உண்மையாகும்.. இவ்வளவு சக்தி வாய்ந்த முட்டு கொடுக்கும் இப்பாலத்தின் சாலைக்கு அடியிலேயே பெட் ரோல் மற்றும் டீசல் பைப் வழியாக பதிக்கப்பட்டுள்ளது உங்கள் வண்டிக்குள் அதுவாகவே எரிபொருளை தீரத்தீர நிரப்பிவிடும் அந்தளவுக்கு நவீன டெக்னாலஜி! ஒரு வேளை உங்கள் வண்டி பஞ்சராகிவிட்டால் சாலையே உங்கள் டயருக்கு காற்றடித்து தரும்.. அதற்கான ஏர் வால்வுகள் சாலை எங்கும் அமைக்கப்பட்டுள்ளது.. உங்கள் கார் கட்டுப்பாடு மீறி பாலத்தை உடைத்துக் கொண்டு கடலுக்குள் எங்கு பாய்ந்தாலும் பாலத்தில் உள்ள சென்ஸார்கள் செயல் பட்டு கடலுக்கு அடியில் வழினெடுகிலும் நிறுத்தப்பட்டு இருக்கும் ரப்பர் மிதவைகள் கேப்டன் தோனி எடுக்கும் கேட்ச் போல உங்களை தாங்கிக் கொள்ளும்! அது மட்டுமின்றி வழியில் சாப்பிட ஒரு ஸ்விட்ச் அழுத்தினால் போதும்... ஹெலிகாப்டர் மூலம் உங்களுக்கு உணவு வழங்கப்படும்.. பாலம் நெடுகிலும் சோலார் தகடும் பொருத்தப்படவுள்ளது.. எனவே சோலார் கார்களும் இதில் ஓடும்.. கொல்கத்தா பாண்டிச்சேரியை 10 மணி நேரத்தில் கடக்கும் படி 8 வழிச்சாலையாக இப்பாலப்பணிகள் துவங்க உள்ளது.. இந்த பாலத்தின் துவக்க விழாவில் எரிச்சலோடு கலந்து கொண்டு டிரம்ப் துவக்கிவைக்கிறார்.. உலகின் முதல் நானோ டெக்னாலஜி பாலம் இந்தியாவில் அமைவதே சிறப்பு என வடகொரிய அதிபர் அறிக்கை விட்டு டிரம்பின் கோபத்தை மேலும் கிளறிவிட்டுள்ளார்! இந்தப் பாலம் காங்கிரசின் கற்கால ஆட்சிக்கும் பா.ஜ.க பொற்கால ஆட்சிக்கும் உள்ள வேற்றுமையை உலகிற்கு உணர்த்தி இந்தியாவை ஆள மோடிஜி தவிர எவருக்கும் அருகதை இல்லை என்பதை நிரூபிக்கும்.! வாழ்க மோடிஜி! - rajkumar

May 27, 2018 at 07:42PM via Facebook

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...