Sunday, August 06, 2017
100% சிரிப்பு இலவசம்
Source:
100% சிரிப்பு இலவசம்
http://ift.tt/2uf9Ohr
பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள். “இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள். அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள். இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. # ரொம்ப ரசித்தது #பிடிச்சா லைக் பண்ணுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment