Saturday, December 10, 2016
Don Ashok
Source:
Don Ashok
http://ift.tt/2hxr8U6
எம்.ஜி.ஆருக்குப் பிறகு பண்ருட்டி, ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், நெடுஞ்செழியன் என நிறைய பேர் இருந்தார்கள். அவர்களையெல்லாம் தாண்டி ஜெ தலைவியானார். ஆனால் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவில் யாருமே இல்லை. ஓ.பி.எஸ் உட்பட எல்லோருமே ஒரே மட்டமாக காலில் விழுந்துகிடந்த அமைச்சர்கள்தான். இந்த அமைச்சர்களில் யாரையாவது முதல்வர் ஆக்கினால் அவர்களுக்குள், "நீயும் கார் டயர், நானும் கார் டயர்! நீ என்ன உசத்தி நான் என்ன தாழ்ச்சி," என்ற நியாயமான அதிகார சண்டை வரும். அடுத்ததாக சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா என அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர்களை யோசித்தாலும் குழப்பமாகவே இருக்கிறது. விந்தியா ஹெல்காப்டரில் மீன் பிடிக்கும் திட்டமெல்லாம் வைத்திருந்தவர். அவரை முதல்வர் ஆக்கிவிடலாமா என்றால் சி.ஆர்.சரஸ்வதி என்ற அறிவில் மூத்தோர் ஒருவர் இருக்கிறார். சரி அவரை ஆக்கிவிடலாமா எனப் பார்த்தால் வளர்மதி என்ற ஆற்றல்மிகு தலைவர் கொடூரமாக முறைக்கிறார். அப்படியே கீழே வந்தால் ராமராஜன், செந்தில், குண்டுகல்யாணம் போன்ற அதிமுகவின் மூன்றாம் கட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். ராமராஜனை முதல்வர் ஆக்கினால் பால்வளத்துறையில் புரட்சி ஏதாவது நடக்க வாய்ப்புண்டு. பீட்டா, மோடி ஆதரவும் அவருக்கு இருக்கும். ஆனால் ராமராஜனே வாய்திறந்து சின்னம்மா தான் சார் ஆகணும் என சொல்லிவிட்டார். நடராஜனை ஆக்கலாம். ஆனால் அவர் அதிமுகவா என்றே தெரியவில்லை. பேசாமல் ஜெ அன்பாக வளர்த்த வைகோவை அதிமுக தலைவர் ஆக்கி முதல்வர் ஆக்கலாம் என்றால் அதிமுக தொண்டர்கள் எல்லாம் ஒரேநாளில் ஒடிப்போய் மதிமுகவில் சேர வாய்ப்புள்ளது. வேல்முருகன், சீமான், திருமுருகன், நெடுமாறன், தமிழருவி மணியன் போன்ற பண்ணை வளர்ப்புகளை ஆக்கலாம் என்று பார்த்தால் எல்லோரும் முத்து ரஜினி போல் கோரஸாக "நாங்க என்னிக்குமே வேலைக்காரன்தான் எஜமான்," என சொல்லிவிட்டார்கள். ஆக மிச்சம் இருப்பது சசிகலாதான். ஜெவையே வழிநடத்தியவர் சசிகலா. ஜெ வழிநடத்திய அதிமுகவை வழிநடத்த மாட்டாரா? பாண்டே, ஜெ இறந்த அன்றே புது முதலாளிக்காக ரெடி ஆகிவிட்டார். தினமணி ரெண்டாம் நாளே சசிதான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என தலையங்கமும் எழுதிவிட்டது. தினமலரில் இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள். விகடன் வழக்கம்போல நல்லா நாலு நக்கு, லைட்டா ஒரு அடி என்ற ஃபார்முலாதான் என்பதால் பிரச்சினை இல்லை. அவ்வளவுதான். நமக்கெல்லாம் கருத்து சொல்ல என்ன சார் இருக்கு? என்னதான் இருந்தாலும் சின்னம்மா ஒரு பெண். ஆணாதிக்க சமூகத்தில இத்தனை ஆண்களை எதிர்த்து ஜெ அரசியல்ல இருந்தப்ப அவங்க கூட இருந்ததே பெரிய துணிச்சல். So I support chinnamma! அப்புறம் சார் சொல்ல மறந்தே போயிட்டேன் பாருங்க. "சூரியனின் அஸ்தமனம்," அப்படினு ஒரு விபூதி பூசுன அண்ணன் கட்டுரை எழுதுனாரே. இன்னைக்கு ஃபுல்லா அவரத்தான் சார் நினைச்சுட்டு இருந்தேன். சும்மா சொல்லக்கூடாது நல்ல தொலைநோக்கு பார்வை சார் அவருக்கு. அவரெல்லாம் நல்லா வரணும் சார். நல்லா வரணும். -டான் அசோக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment