Monday, December 05, 2016
கிளிமூக்கு அரக்கன்
Source:
கிளிமூக்கு அரக்கன்
http://ift.tt/2gZe1ia
கேள்வி :- தினமலர் உட்பட வேறு சில ஊடகங்களும் முதல்வர் காலமாகிவிட்டார் என்று அவசர குடுக்கைத்தனமாக செய்தி வெளியிட்டாலும் பொதுமக்களும் அதிமுகவினரும் ஏன் ரங்கராஜ் பாண்டேவின் மேல் கோபத்தைக் காட்டுகின்றனர் அரக்கரே? பதில் :- மற்ற ஊடகங்கள் ஒன்று நடுநிலை என்றோ அல்லது அதிமுக எதிர்ப்பு என்றோ அறியப்படுபவை. ஆனால் தந்தி டீவியும் ரங்கராஜ் பாண்டேயும் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் போல. அதிமுகவினர் ஜெயாடீவிக்கு தரும் முக்கியத்துவத்தைவிட சமயங்களில் தந்தி டீவிக்கும் பாண்டேவிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம்தான் அதிகம். அப்படி அதிமுகவின் குரல் என்று அறியப்பட்ட பாண்டே ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற பொய்யான தகவலை அவசரக்குடுக்கைத்ததனமாக தரும்பொழுது மக்கள் அதை உண்மை என்றே நம்புவார்கள். கிட்டத்தட்ட அதிமுகவின் அரசியல் தொடர்பாளர் வைகோ அதிமுக சார்பாக தரும் செய்தியைப்போன்றது அது. தமது நம்பிக்கையை பொய்யாக்கி பாண்டே தனது காவி முகத்தை வெளிக்காட்டியது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. அதிர்ச்சி மட்டுமல்லாது பெரும் பதட்டத்தையும் உருவாக்கியதால் மக்கள் தந்தி டீவியின் மேலும் பாண்டேவின் மேலும் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். மக்களின் கோபம் நியாயமானது. பொதுமக்கள் அதிமுகவினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பாண்டேவை தந்தி குழுமம் பதவி நீக்கம் செய்யவேண்டும். #RIPThanthiTV
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment