Monday, November 23, 2015
அரசியல் நையாண்டி Political Satire
Source:
அரசியல் நையாண்டி Political Satire
http://ift.tt/1IaEAUA
500 கோடி வெள்ள நிவாரண நிதி ஓய்வில் இருக்கும் தமிழக முதல்வர் அறிவித்து விட்டார். இதை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்த அதிமுக கட்சியின் அரசாங்க வக்கீல் (இவர் முகப்பேர் பகுதி ரோடு கான்டிராக்டரும் ஆவார்) மற்றும் அவரது படைகளும் ஒரு ஜேசிபி வண்டியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு தெருவாக சென்று புதிதாக அமைத்த சாலைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்படி செய்யும்போது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை தங்கள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால் அவர் அசராமல் அதை வீடியோ எடுக்க வைக்கிறார். காவல்துறையும் வருகிறது. அதிமுக குண்டர்களிடம் சாலையை உடைக்க சொன்னது யார் ? அந்த மாநகராட்சி அதிகாரி எங்கே என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. அதாவது நமது வரிப்பணத்தில் கட்டிய சாலைகளை அதிமுக குண்டர்கள் நினைத்தால் உடைக்கலாம் என்பது தான் இன்றைய நிலைமை. அதற்கு அவர்கள் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை கேடையமாக உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் சாலை போடும் போதும் மழை நீர் வடிகால் கட்டும் போதும் அந்த தாழ்வான பகுதிகளை பற்றிய கவலை இவர்களுக்கு இருந்திருத்தால் அன்றே இந்த பகுதியில் மழை பெய்தால் மழை நீர் எவ்வாறு வெளியேறும் என்று யோசித்திருப்பார்கள். புதிய சாலைகள் அமைக்கும் போது பழைய சாலையை உடைத்து எடுத்து விட்டு அதே மட்டத்தில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அதை அப்பட்டமாக அனைத்து பகுதிகளிலும் மீறுகிறார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து தடுக்காவிட்டால் நாளை உங்கள் பகுதியிலும் மழை காலங்களில் நீச்சல் குளம் தான் இருக்கும். வீடியோ மற்றும் செய்தி : திரு. பாலாஜி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment